‘‘தமிழ் மொழியைக் காப்போம்’’, ‘’தமிழ் மொழியை வளர்ப்போம்’’
இவற்றில் எது சரியானதாகும்?
நண்பர் ஒருவர் facebookல், இனிய தமிழ் மொழியின் மீது தனக்கிருக்கும் மட்டற்ற பற்றின் காரணமாய்,
‘‘ தமிழை வளர்ப்போம், தமிழை வளர்ப்போம்
என்று அறைகூவல் விடும்
அத்துனை தமிழ் ஆர்வளர்களுக்கும்
நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்...
தமிழை வளர்ப்பதற்கு அது,
பதர் நீக்கிய விதையைப் பதிய மிட்டு,
அதற்கு பல நாள் தண்ணீர் விட்டு,
வாடிப் போய் வளராத விதையல்ல..!
ஆழ வளர்ந்து,
அகலப் படர்ந்து,
அத்துனை தமிழனையும்
அரவணைக்கும் சக்தி
கொண்ட ஆலமரம்..!
அது வளர்க்கப்பட வேண்டியதில்லை - கொஞ்சம்
அழியாது காக்கப் பட வேண்டும்..! ’
அத்துனை தமிழ் ஆர்வளர்களுக்கும்
நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்...
தமிழை வளர்ப்பதற்கு அது,
பதர் நீக்கிய விதையைப் பதிய மிட்டு,
அதற்கு பல நாள் தண்ணீர் விட்டு,
வாடிப் போய் வளராத விதையல்ல..!
ஆழ வளர்ந்து,
அகலப் படர்ந்து,
அத்துனை தமிழனையும்
அரவணைக்கும் சக்தி
கொண்ட ஆலமரம்..!
அது வளர்க்கப்பட வேண்டியதில்லை - கொஞ்சம்
அழியாது காக்கப் பட வேண்டும்..! ’
என்று கூறியிருந்தார்.
மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் நண்பர் சொன்னது
நன்று
என்றே தோன்றும்!
ஆயினும் ஆராய்ந்து பார்க்கும்போது மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை அறியலாம்.
காக்கப்படுதல் என்பது ஒன்றிற்கு எவ்விதத்திலும் தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும்படியாய் ‘காவல்’ அல்லது ‘கண்காணிப்பு’ செய்வது ஆகும். அதாவது ஒன்றை உள்ளது உள்ளபடியே இருக்கச்செய்வது என்ற நிலையைக் குறிப்பதாகின்றது.
இதனடிப்படையில் நோக்கும்போது ‘தமிழ் மொழியைக் காப்போம்’ என்பது தமிழ் மொழியானது தற்போது ‘உள்ளது உள்ளபடியே’ என்ற நிலையில் இருக்க உதவுவது என்றாகிவிடுகின்றது.
அதாவது, தமிழ் மொழியில் அதன் இலக்கியத்தில் வளர்ச்சியற்ற தன்மைக்கு வித்திட்டு சம்ஸ்கிருத மொழியைப்போன்ற வழக்கில் இல்லாத மொழியாக்கிவிடும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகின்றது.
ஆனால், ‘வளர்ப்போம்’ என்று குறிப்பிடும்போது அதில் ஒரு சிறப்பு இருப்பதை அறியமுடிகின்றது.
‘வளர்ச்சி’ எனும் சொல் "தன்னுடைய தற்போதைய நிலையிலிருந்து அதிகரித்து அடுத்த நிலையை அடையும் முறை" என்றும் பொருள் தரும்.
நண்பர் குறிப்பிடும் ஆலமரமாகட்டும் அல்லது வேறு எவ்வகைத் தாவரமாகட்டும் அவையாவும் வளர்ந்துகொண்டே இருப்பனதானே!
மேலும், வளர்ச்சி எனும் சொல்லானது தோன்றிய ஒன்று தானே வளர்ந்து நிற்பதைக்கூடக் குறிக்கும். எனினும், வளர்ந்தாலும் அது அழியாமல் நிலைபெற்று இருக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
ஆனால், ‘வளர்ப்பது’ என்ற சொல் தானே வளர்ச்சியை அடையக்கூடிய ஒன்றாய் இருந்தாலும் அது அவ்வாறு வளரவும், அதற்கு எவ்வகைத் தீங்கும் நேராது, நிலைபெற்று தழைத்தோங்கப் பிறரால் பாதுகாத்து வளர்க்கப்படுவதையே குறிக்கின்றது. அதாவது வளர்ச்சியுடன் உரிய காத்தலும் இருக்கின்றதை உணர்த்துகின்றது.
இதுவே
‘வளர்ப்போம்’ என்பதன் தனிச் சிறப்பாக அமைகின்றது.
எனவே, ‘தமிழ் மொழியைக் காப்போம்’ - தற்போது ‘உள்ளது உள்ளபடியே’ என்ற நிலையில் அதனை இருக்கச் செய்வோம்- எனக் கூறுவதைதைவிட, தமிழ்மொழி தொடர்ந்து இலக்கிய வளர்ச்சிதனைப் பெற்று நிலையாகத் தழைத்தோங்கச் செய்வோம் எனும்விதமாய் "தமிழ் மொழியை வளர்ப்போம்" என்று கூறுவதே சரியாக இருக்கின்றது.
######
No comments:
Post a Comment