ஜனவரி, பிப்ரவரி
மாதங்களே இல்லாதிருந்த ஆண்டுகள் !
-
நம் காலண்டருக்குப் பின்னால் இருப்பதென்ன? -1.
நம் காலண்டருக்குப் பின்னால் இருப்பதென்ன? அதன் வரலாற்றை அறியலாம் வாருங்கள் !
இப்போது நாம் பயன்படுத்தும் காலண்டரானது முன்னர், ரோமானியர்களின் காலண்டராக
இருந்து பின்னர் ஜூலியன் காலண்டராகி அதன்பின் நவீன உருவெடுத்த
ஒன்றானதாகும்.
ரோமானிய காலண்டர்
& ஜூலியன் காலண்டர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பண்டைக்காலத்தில் ரோமானியர்களின் காலண்டரானது ரோம் நகரம் தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து / ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்ட ஆண்டுகளைக் கொண்டிருந்த ஒன்றாய் இருந்து வந்தது.
பண்டைக்காலத்தில் ரோமானியர்களின் காலண்டரானது ரோம் நகரம் தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து / ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்ட ஆண்டுகளைக் கொண்டிருந்த ஒன்றாய் இருந்து வந்தது.
அது, மார்ச் மாதத்தினை முதல் மாதமாகவும் டிசம்பர் மாதத்தை இறுதியாகவும் கொண்ட பத்தே பத்து மாதங்கள் கொண்ட ஆண்டுகளாக இருந்து வந்தது.
பத்தாம் மாதத்திற்குப் பின்னரிலிருந்து
முதலாம் மாதமான மார்ச் வரையில்
இடைப்பட்டிருந்த பனிக்கால நாட்கள் பெயரிடப்படாமலேயே இருந்து வந்தன.
பின்னர்,
, புகழ்பெற்ற ரோமேனிய இரண்டாம் மன்னன் நுமா பொம்போலியஸால் (Numa Pompilius 715-672 B.C.),
அப்பனிக்கால நாட்களும் கணக்கிடப்பட்டு ஜனவரியஸ் (Januarius),
பிப்ரவரியஸ் (Februarius) என
இரு மாதங்களாய்ப் பெயரிடப்பட்டன. இவையே பின்னர் ஜனவரி, பிப்ரவரி என்றாகின.
அதன் பின்னர், பேரரசன் ஜுலியஸ் சீஸர் ரோமேனிய
மாதங்களின் நீள அளவை சீரமைத்தார்.
அவர், ஒவ்வொரு நான்காவது ஆண்டு தவிர, பிப்ரவரிமாதத்திற்கு 28 நாட்கள்
வழங்கினார். லீப் ஆண்டான நான்காவது ஆண்டில் ஒரு கூடுதல் நாள் அளிக்கப்பட்டது. அக் கூடுதல் நாள், இப்போது மாத இறுதியில் உள்ளது போல் இல்லாமல், பிப்ரவரி 23 , 24 நாட்களிடையே அளிக்கப்பட்டது.
ஜுலியஸ் சீஸரின்
ஆற்றல், ரோமாபுரி இரச்சியத்திற்கு அவரால் கிடைத்த வெற்றிகள், ஆண்டுகளை கணக்கிட அவர்
உருவாக்கிய
காலண்டர் சீரமைப்பு போன்றவற்றிற்காக
அவரைப் பெருமைப்படுத்தும் வண்ணமாய் ரோமானிய மந்திராலோசனை அவை (Senate) ஜுலியஸ் சீஸர் பிறந்த மாதத்திற்கு ‘ஜுலியஸ்’ (Julius)
எனப் பெயர் சூட்டியது.
மாதங்களின் பெயர்க்காரணம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.ஜனவரியஸ் / ஜனவரி
~~~~~~~~~~~~~~~~~~~~~~
‘ஜனஸ்’ என்பது ரோமானியரின், வாயிற்புரங்களின் கடவுளின் பெயராகும், ஜனஸின் பண்டிகை இந்த மாதத்தில் அமைந்ததால் ஜனவரியஸ் என்று வழங்கப்பட்டு பின்னர் ஜனவரி என்றழைக்கப்பட்டது.
2.பிப்ரவரியஸ் /பிப்ரவரி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரோமானியர்கள் இம் மாதத்தின் 15ம் நாளினை ‘லூப்பர்ஸாலியா’ என்றழைக்கப்பட்ட புனிதமாக்கப்படும் விழாநாளாகக் கொண்டாடிவந்தனர். ‘லூப்பர்ஸாலியா’ திருவிழா என்பது, பலிகொடுக்கப்பட்ட ஆடுகளின் தோலை அணிந்த இருவர் அவ்வாடுகளின் தோலில் செய்த வார் பட்டைகளால், கூடியுள்ள கூட்டத்தினரை குறிப்பாகப் பெண்களை
விலாசி அடிக்கும் திருவிழாவாகும்.
அப்படிச் செய்வதால் அவர்கள்
புனிதமடைவதாய், சபிக்கப்பட்ட மலட்டுத்தன்மை நீங்கி பிள்ளைப்பேறடைவதாய், அக்காலத்தில்
நம்பப்பட்டது.
அவ்வாறு புனிதமாக்கப் பயன்படுத்தப்படும் தோல்வாருக்குப் ‘februa’ (purifiers) எனப்பெயர். அதைக் குறிக்கும் வகையில் "பெப்ருரியவஸ்' என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.
இம் மாதம், ஜுலியஸ் சீஸரின் காலத்தில்,
ஒவ்வோர் ஆண்டிலும் 28 நாட்கள் கொண்ட,
நான்கு ஆண்டிற்கொருமுறை 29 நாட்கள் கொண்ட மாதமாய் மாற்றப்பட்டது.
3.மார்ஷியஸ் / மார்ச்
~~~~~~~~~~~~~~~~~~~~~
ரோமானியப் போர்க்கடவுள் ‘மார்ஸ்’சைக்
குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதம் மார்ஷியஸ் (Martius) என்று
பெயரிடப்பட்டது. இதுவே மார்ச் என
மாறியது.
பழைய ஆண்டு முடிவதையும் புதிய ஆண்டு
பிறப்பதையும் கொண்டாடப் போர்நிறுத்தம் கடைபிடிக்கவேண்டுமென ரோமானியர் வலியுறுத்திதாயும் கூறப்படுகின்றது.
4.ஏப்பிரைர் / ஏப்ரல்
~~~~~~~~~~~~~~~~~~~
"ஏப்பிரைர்' (“aperire,”) என்ற லத்தீன் சொல்லுக்கு "திறந்து விடு' ‘to open’ (buds) எனப்பொருள். மலர்கள் மலர்ந்து ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் வசந்தத்தின் முதலாம் மாதமானதால் அச் சொல்லிலிருந்து "ஏப்பிரைர்' என்று பெயரிடப்பட்டது. இதுவே "ஏப்ரல்' என மாறியது.
5.மே
~~~~~
உலகத்தை சுமக்கும் ரோமானியரின் கடவுள் "அட்லஸ்" -ன் மகள் "மையா" (Maia) தாவரங்களின் தேவதையாவாள். மையாவின் பெயரால் தோன்றிய மாதம் "மே'.
உலகத்தை சுமக்கும் ரோமானியரின் கடவுள் "அட்லஸ்" -ன் மகள் "மையா" (Maia) தாவரங்களின் தேவதையாவாள். மையாவின் பெயரால் தோன்றிய மாதம் "மே'.
6.ஜூன்
~~~~~~~
"ஜுனோ' எனும் தேவதையை பெண்களுக்குரிய, குறிப்பாக, மணவாழ்க்கையின் தேவதையாக ரோமானியர்கள் வழிபட்டனர். அத் தேவதையின் பெயரால் வந்தது தான் ஜுன்.
"ஜுனோ' எனும் தேவதையை பெண்களுக்குரிய, குறிப்பாக, மணவாழ்க்கையின் தேவதையாக ரோமானியர்கள் வழிபட்டனர். அத் தேவதையின் பெயரால் வந்தது தான் ஜுன்.
7. "ஜுலியஸ்'/ஜூலை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரம்ப
காலத்தில்,
ஐந்தாவது
மாதமாக
அழைக்கப்பட்டது.
பின்னர், ரோமேனிய மாதங்களை சீரமைத்தபோது பேரரசன் ஜுலியஸ் சீஸர் பெயரால் "ஜுலியஸ்'
என்று பெயரிடப்பட்டு,
பின்னர் ஜுலை என்றானது.
8.செக்ஸ்டீலியா/ ஆகஸ்ட்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்மாதம் முன்னர், லத்தீன் சொல்லான ‘Sextillia, – ஆறு’ என்றபொருள்பட முப்பது நாட்கள் கொண்ட, ஆறாவது மாதமாக அழைக்கப்பட்டு
வந்தது.
ஜுலியஸ் சீசரால் தனது வாரிசு என்று அறிவிக்கப்பட்ட, அவரது கொலைக்குப் பின்னர் ரோமாபுரியில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்களை அடக்கி ஆட்சிக்கு வந்த, மன்னன் அகஸ்டஸ் சீசரைப் போற்றி, அவரைப் பெருமைப்படுத்தும் வண்ணமாய், ரோமானிய மந்திராலோசனை அவை (Senate), அதுவரையில் 30 நாட்களே கொண்டிருந்த இம்மாதத்திற்கும் ஜுலை மாதத்திற்குள்ளது போலவே 31 நாட்களை ஏற்படுத்தி ஜுலியஸ் சீசருக்கு இணையானவன் எனக்காட்டி ‘ஆகஸ்டஸ்’ (Augustus) எனப் பெயர் சூட்டியது. அதுவே பின்னர் ஆகஸ்ட் என்றாகியது.
நாம், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களை முறையே 9, 10, 11 மற்றும்
12 ஆம் மாதங்களாய் நினைக்கின்றோம். ஆனால்,
அவை, பண்டைய ரோமன் காலண்டரில், 7,8,9 மற்றும் 10 ஆவது மாதங்களாய் இருந்தன. இனி அவற்றைக் காண்போம்.
‘செப்டம்'/செப்டம்பர்
~~~~~~~~~~~~~~~~~~~~
மார்ச் முதல் மாதமாக இருந்த
காலத்தில்
செப்டம்பர்
ஏழாவது
மாதமாக
இருந்தது.
இம்மாதத்தினை
‘ஏழு’ என்பதைக்குறிக்கும்
லத்தீன் மொழிச் சொல்லான "செப்டம்'
என்ற
பெயராலாயே அழைத்தனர். ஆனால், புதிய
அமைப்பின்படி
ஒன்பதாம்
மாதமாக
மாறிவிட்டாலும்
கூட
பழையபெயரே
நிலைத்து
விட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லத்தீன் மொழியில் ‘அக்ட்டோ' என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.
லத்தீன் மொழியில் ‘அக்ட்டோ' என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.
‘நொவம்'/நவம்பர்
~~~~~~~~~~~~~~~~~~~
லத்தீன் மொழியில் ‘நொவம்' என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் கூட பெயர்மாற்றம் செய்யப்படவில்லை.
லத்தீன் மொழியில் ‘நொவம்' என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் கூட பெயர்மாற்றம் செய்யப்படவில்லை.
‘டிசம்'/டிசம்பர்
~~~~~~~~~~~~~~~
லத்தீன் மொழியில் ‘டிசம்' என்றால் "பத்து' . பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது.
~~~~~~~~~~~~~~~
லத்தீன் மொழியில் ‘டிசம்' என்றால் "பத்து' . பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது.
ஜுலியஸ் சீஸர் ஏற்படுத்திய காலண்டரே ‘ஜுலியன் காலண்டர்’ என்று அறியப்படுகின்றது.
~~~~~~~~~~~~~~~~~8888888~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment