Tuesday, 8 January 2013

நாராயணா கோபாலா....கோவிந்தா கோ….விந்தா!

              நாராயணா கோபாலா....கோவிந்தா கோ….விந்தா!
               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      பழங்காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் குடியிருந்த, பிராமணர்களுல் ஓர் பிரிவினரான, அஷ்ட ஸகஸ்ரத்தார் வழிவந்தோர் புரட்டாசி மாத சனிக்கிழைமைகளில் காலையில் நீராடி, ஈர உடையோடு சில வீடுகளுக்குச்சென்று 'அரிசிப் பிச்சை' எடுப்பார்கள். அவ்வாறு பிச்சையெடுத்த அரிசியை தங்கள் வீட்டிற்கு கொண்டுவந்து அதையே சமைத்து படைப்பார்கள், அதன்பின் அந்நிவேதானத்தை உண்ணுவதும், இரவில் பலகாரம் செய்வதும் வழக்கம்.

      நாளடைவில், இவ்வழக்கத்தை மற்ற குடும்பத்தினரும் பின்பற்றத் தொடங்கினார்கள். இதன் விளைவாக வந்த வழக்கமே இன்றும் கிராமப்புரங்களில்,
புரட்டாசி மாத சனிக்கிழைமைகளில் காலையில், சிறுவர் சிறுமியர் ‘’நாராயணா கோபாலா.... கோவிந்தா கோ….விந்தா’’ எனக்கூவி அறிந்தவர் வீடுகளில் அரிசி பெறுவதாகும்!

No comments:

Post a Comment