‘ செப்டம்பர் 2’ ந் தேதிக்கு அடுத்து வந்த நாள் ‘ செப்டம்பர் 14’ !
- நம் நாட்காட்டிக்குப்
(காலண்டருக்குப்) பின்னால் இருப்பதென்ன? -2.,
ஜூலியன் நாட்காட்டி மற்றும் நவீன நாட்காட்டி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆகியவற்றின் ஒற்றுமையும் வேறுபாடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒற்றுமை :-
கி.மு. 45-ல் ஜூலியஸ் சீசர் நடைமுறைப்படுத்திய ‘ஜூலியன் நாட்காட்டி’ ஒரு சூரிய ஆண்டு அடிப்படையில், பன்னிரண்டு மாதங்களாய் பிரிக்கப்பட்டுள்ளது. நவீன நாட்காட்டியும் அவ்வாறே ஆனவொன்று.
ஆண்டுகளின் சுழற்சியும் இன்று பயன்படுத்தப்படும் நாட்காட்டியைப் போலவே அதுவும் தோற்றமளிக்கின்றது: ஒவ்வொரு ஆண்டிலும் 365 நாட்கள் கொண்டதாய் தொடர்ந்து மூன்று ஆண்டுகள், ஒவ்வொரு நான்காவது ஆண்டும் 366 நாட்கள் உள்ள ஒரு லீப் ஆண்டு.
வேறுபாடு :-
ஜூலியன் நாட்காட்டிக்கும் இன்றுள்ள நாட்காட்டிக்கும் உள்ள ஒரே பெரிய வேறுபாடு, புதிய ஆண்டின் துவக்க நாள் ஆகும்.
ஜூலியன் நாட்காட்டியில் புதிய ஆண்டின் துவக்க நாள் மார்ச் 1ந் தேதியாக இருந்தது, இக்கால நாட்காட்டியில் புதிய ஆண்டின் துவக்க நாள் ஜனவரி 1 என்பதேயாகும்!
ஜூலியன் நாட்காட்டிக்கு கிறிஸ்துவர் ஏற்படுத்திய மாற்றங்கள் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் புதிய ஆண்டின் துவக்க நாள் ‘ஜனவரி 1’
என்பதிலிருந்து ‘கிறிஸ்துமஸ் நாளிற்கு’ மாற்றி அமைக்கப்பட்டது.
பின்னர் இது, கி.பி. 5ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னதாக ‘மார்ச் 25’ க்கு, அதாவது, கன்னி மேரியிடம் அவர் கிறிஸ்துவின் அம்மாவாக ஆவார் என்று ஏசுவின் பிறப்பை கேப்ரியல் என்ற தேவதை உணர்த்திய நாளுக்கு(Annunciation Day) மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது.
இப்படிப் புத்தாண்டின் நாள் மீண்டும் மீண்டும் மாற்றப்பட்டாலும் இன்றும் சில மாதங்களுக்கானப் பெயர்கள், லத்தீன மொழியில் எண்களைக்குறிக்கும் சொற்களைக் கொண்ட ‘ஜூலியன் ஆண்டின்’ பெயர்களையே தாங்கி நிற்கின்றன.
எடுத்துக்காட்டாக, செப்டம்பர்-ஏழாவது, அக்டோபர்-எட்டாவது, நவம்பர்-ஒன்பதாவது மற்றும் டிசம்பர்-பத்தாவது மாதம் என்பன.
ஜூலியன் நாட்காட்டி - கோளாறும்
சீர்திருத்தத்திற்கான
அவசியமும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜூலியன் நாட்காட்டியைச் சீர்திருத்தம் செய்யக் காரணமாய் அமைந்தது எதுவெனில், அது, ஒரு ஆண்டிற்கு 365.25 நாட்கள் என்று கருதியது என்பதே. உண்மையில், ஒரு ஆண்டானது, ஜூலியன் நாட்காட்டியின் கணக்கைவிட ஏறத்தாழ 11 நிமிடங்கள் குறைவானதாகக்
கண்டறியப்பட்டது.
அதாவது, ஜூலியன் நாட்காட்டியானது ஒரு ஆண்டை 365.25 நாட்கள் (365 நாட்கள் 6 மணி) கொண்டது
எனக் கணக்கிட்டிருந்தது. ஆனால், ஒரு ஆண்டுக்கு 365.2425 நாட்கள் (365 நாட்கள் 5 மணி 49 நிமிடங்கள் 12 விநாடிகள்) மட்டுமே
என்று அறியப்பட்டது,
முன்னர் கூறிய அடிப்படையில் ஜூலியன் நாட்காட்டியைக்கொண்டு ஆண்டுகளைக் கணக்கிட்டதில் ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும் நாட்களின் எண்ணிக்கையில் மூன்று நாட்கள் சறுக்கல் ஏற்பட்டிருந்தது.
இதன்விளைவாக, ரோமானியர் காலம் முதல் சீர்திருத்தத்தின் அவசியம் ஏற்பட்ட காலம் வரையிலேயே 10 நாட்கள் கால வித்தியாசம் ஏற்பட்டிருந்தது.
‘’கிரிகோரியன் நாட்காட்டி’
யின் தோற்றம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்போதய நவீன நாட்காட்டி, ஜூலியஸ் சீசர் காலத்து நாட்களில் இருந்த பயன்பாடுகள் உள்ளடக்கிய ஒரு தொகுப்பே ஆகும்.
அது, ஜூலியஸ் சீசர் காலத்து கிரேக்க வானியல் மற்றும் கணித நிபுணர் ஸோஸிஜெனெஸ் (Sosigenes) என்பவரால், ரோம் நாட்டிற்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.
கி.பி.16 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில்,
ஜுலியன் நாட்காட்டி நடைமுறையில் இருந்தபோது, அது, ஈஸ்டர் நாளை அறிந்து ஈஸ்டர் தேதி குறித்தப் பிரகடனங்கனை வெளியிடுவதில் குளறுபடிகளை ஏறபடுத்தியிருப்பதாய் அறிந்த, அப்போதைய
போப்பான, பதிமூன்றாம் கிரிகோரி குளறுபடிகளற்ற நாட்காட்டி ஒன்றின் அவசியத்தை உணர்ந்தார்.
அதன்படி, கி.பி.6 வது நூற்றாண்டில் ஆங்கிலோ-சாக்சன் துறவியான பேடே (Bede) என்பவரால் ரோமன் கத்தோலிக்கச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டக் கணிப்புகளை ஏற்று ஒரு துல்லியமான நாட்காட்டி ஒன்றை வெளியிட முடிவுசெய்தார்.
அதன்படி, ஆண்டொன்றின் கணக்கெடுப்பில் 10 நிமிடங்கள் 48 நொடிகள் குறைப்பு எனும் சீர்திருத்தத்தோடு, ஏற்கனவே, வித்தியாசப்பட்ட காலஅளவு கணக்கினால்
ஏற்பட்டிருந்த இடைவெளியையும் சீரமைக்க, நாட்காட்டியில் 10 நாட்களைக் கைவிடுவது எனும் சீர்திருத்தமும் அவசியமானது.
இறுதியில், அதன்படி,
போப் பதிமூன்றாம் கிரிகோரி, கி.பி. 1582 ஆண்டு பிப்ரவரி 24 ந் தேதியில் தன் கைச்சாத்திடப்பட்ட தீர்ப்பின்படி ஒரு நாட்காட்டியினை வெளியிட்டார். அது உடனடியாக அனேக
ரோமன்கத்தோலிக்க நாடுகளால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
ஆயினும், அக்காலகட்டத்தில் ரோமன்கத்தோலிக்க போப்பினை ஏற்காத, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல பிராட்டஸ்டன்ட் நாடுகள் மற்றும் பிரிட்டனின் ஆளுகையிலிருந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில், 18 ஆம் நூற்றாண்டு வரை கிரிகோரியன் நாட்காட்டி ஏற்றுக் கொள்ளப்படவேயில்லை.
இந்தியாவில் நடைமுறைக்கு வந்த
நாள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இறுதியில், பிரிட்டிஷ் அரசு கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டு அதனைத் தன் நாட்டிற்கும் மற்றும் தனது ஆளுமையின் கீழிருந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கி.பி. 1752 ஆம்
ஆண்டு மார்ச் 25, ந்
தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தியது.
நாட்காட்டியில் இல்லாதுபோன நாட்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவ்வாறு கிரிகோரியன் நாட்காட்டியை நடைமுறைப் படுத்தியதில் குறிப்பிடத்தக்கவை எவையெனில்,
1. முதலாவதாக
அது, கி.பி. 1752ஆம் ஆண்டானது டிசம்பர் 31ந்தேதியன்றே முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்றும் அடுத்த மார்ச் 25ந் தேதிவரை நீட்டிக்க முடியாது என்றும் ஆணையிடப்பட்டது.
2. இரண்டாவதாக, அது, அவ்வாண்டில் (கி.பி.1752-ல்) வரக்கூடிய செப்டம்பர் 3ந் தேதியைக் கண்டிப்பாக செப்டம்பர் 14, 1752 என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது.
இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இப்படிப்
பார்ப்போம் :-
முதலாவதாக, கி.பி. 1751 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதலாய் மார்ச் 24ந்தேதிய காலத்தோடு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது;
இரண்டாவதாக, ஜனவரி 1 ஐ ஆண்டின் முதல் நாளாகக் கொண்ட கிரிகோரியன் காலண்டரோடு இணைத்துக் கொண்டாலும் அந் நாடுகளுக்கு கி.பி.1752 ஆம் ஆண்டானது மார்ச் 25 ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 ந்தேதியுடன் முடிவடைந்த காரணத்தால் அவ்வாண்டின் முந்தைய நாட்கள் காலண்டரில் இல்லவேயில்லாத நாட்களாயின.
அதுபோலவே, அவ்வாண்டின் நீக்கப்பட்ட செப்டம்பர் 3ந்தேதி முதல் செப்டம்பர் 13ந்தேதி முடிய உண்டான 11 நாட்களும் காலண்டரில் இல்லவேயில்லாத நாட்களாயின!
வரலாற்றில், உண்மையில், 94 நாட்கள் (ஜன 31+ பிப்ர 28 +மார் 24+ செப் 11=94) இல்லாத ஒரு மிகக் குறுகிய ஆண்டாயிற்று கி.பி.1752 ஆம் ஆண்டு!
இது கிரிகோரியன் நாட்காட்டி
நடைமுறைக்கு வந்த 24-2-1582ந் தேதியிலிருந்து இந்நாடுகள் நடைமுறைப்படுத்திய
நாளான 25-3-1752 ஆம் தேதி வரையில் இரண்டு நாள்காட்டிகளுக்கிடையே ஏற்பட்ட கூடுதல்
காலவேறுபாடு காரணமாக, தமது நாட்காட்டிகளிலிருந்து 13 நாட்கள் கைவிட வேண்டியதன் காரணமேயாகும்.
போப் பதிமூன்றாம் கிரிகோரி ஏற்படுத்திய நாட்காட்டியே இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டியாகி, அவரது பெயராலேயே, கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian calendar) என அழைக்கப்படுவதாயிற்று !
No comments:
Post a Comment